நெருங்கும் தாழ்வு மண்டலம்

வானிலை அறிக்கை – 06.03.2022

🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும்.தமிழகத்தை நெருங்கும் தாழ்வு மண்டலம்.

🔴அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பு.

🔴தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் முழுவதும் பலத்த மழை பதிவாகும்.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை வட தமிழக கடலோர மாவட்டங்களில் 35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

🔴வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

🔴இதன் காரணமாக வட தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

🔴இன்று இரவு நேரங்களில் காற்றின் வேகம் தமிழக கடலோர பகுதிகளில் கணிசமாக அதிகரிக்கும்.

மேலும் படிக்க : தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது

தமிழகத்தை நெருங்கும் தாழ்வு மண்டலம் மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

🔴06.03.22

🔴தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 70 கிலோ மீட்டர் வீசக்கூடும்.

தமிழகத்தை நெருங்கும் தாழ்வு மண்டலம் நாளை தமிழகத்தில் கரையை கடக்கிறது

🔴வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அறிவித்தபடி வலுவிழந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

🔴தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது

🔴கரை கடக்கும் பொழுது தரை காற்றின் வேகம் 30 முதல் 35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்பு.

🔴கணித்தபடி தாழ்வு மண்டலம் புயலாகவோ அல்லது தீவிர புயலாகவோ மாறவில்லை.

🔴அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு.

🔴தமிழகத்தில் மார்ச் 8 பிறகு இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு.

ADVERTISEMENT

தமிழகத்தை நெருங்கும் தாழ்வு மண்டலம் சென்னையில் வானிலை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 30.9 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்கள் முதல் மழை தொடங்கும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.4 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.3 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்கள் முதல் மழைக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

ADVERTISEMENT

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.0 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply